நூறாண்டு காணும் சேவை(கொலைவெறி) அமைப்பா!

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டைத் தொடர்ந்து, அதன் கொடிய நோக்கங்க ளை மறைத்து வெள்ளையடிக்கும் முயற்சி கள் பகிரங்கமாகத் தொடங்கியுள்ளன. தினமணி நாளி தழில் அக்டோபர் 2ஆம் தேதி சி.பி.ராதாகிருஷ்ணன் எழுதியுள்ள கட்டுரை மிகவும் நகைக்கத்தக்க பொய்யுரையாகும். ஆர்.எஸ்.எஸ் – சேவை அமைப்பா? மோடி ஆட்சியை வழிநடத்தும் ஆர்.எஸ்.எஸ் ஒரு அரசியல் அமைப்பே. அதன் அடிப்படை நோக்கம் ‘இந்துத்துவ’ செயல்திட்டமே. இதை நேரடியாக மக்கள் ஏற்கமாட்டார்கள். எனவே பலவித அமைப்பு களை உருவாக்கி, வெறுப்பை விதைத்து, கலவரங்க ளால் பிரிவினை ஏற்படுத்தி இந்து வாக்கு வங்கியை உருவாக்குகிறார்கள். ஆர்.எஸ்.எஸ் தானே கட்சி யாகச் செயல்படாமல், பாஜக என்ற கட்சியை உரு வாக்கி இயக்குகிறது. அரசாங்கத்தைப் பிடித்ததும் தனது திட்டத்தைத் திணிக்கிறது. எங்கே தொடங்கியது? 1925இல் மராட்டியத்தில் ஹெட்கேவாரும் நான்கு பிராமணர்களும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைத் தொடங்கினர். அதன் தத்துவத்தை 1923இல் வி.டி.சாவர்க்கர் உருவாக்கினார். இந்துத்துவம் என்பது மதக் கொள்கை அல்ல என்று அவரே கூறுகிறார். தொடக்கத்தில் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற சாவர்க்க...