50 ஆண்டுகளுக்கு விடிவே இல்லை!
" கடன் வாங்கும் வெற்றி தமிழகம்?" 50 ஆண்டுகளுக்கு விடிவே இல்லை '' - பேராசிரியர் பிரபாகர் விளக்கம் தமிழக அரசின் தற்போதைய நிதிநிலை அறிக்கை, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை நோக்கிய பயணத்திற்கும், அதிகரித்து வரும் கடன் சுமைக்கும் இடையே உள்ள ஒரு சமநிலைப் புள்ளியாகப் பார்க்கப்படுகிறது. மாநிலத்தின் வருவாயைப் பெருக்கும் வழிகள் மற்றும் கடனைக் குறைப்பதற்கான உறுதியான திட்டங்கள் இதில் எந்தளவுக்குச் சாத்தியமாகியுள்ளன என்ற நடுநிலையான விவாதம் பரவலாக எழுந்துள்ளது. இந்நிலையில் பேராசிரியரும், பொருளாதார நிபுணருமான பிரபாகர் நக்கீரன் டிவிக்கு அளித்த பேட்டியில் தமிழக பட்ஜெட் குறித்த தனது பார்வைகளை பகிர்ந்து கொண்டார். ''தமிழக அரசின் தற்போதைய நிதிநிலை மேலாண்மை குறித்து பல்வேறு விமர்சனங்களும் ஏமாற்றங்களும் பரவலாக எழுந்துள்ளன. இந்த பட்ஜெட்டின் மிக முக்கிய ஒன்லைன் கதையாக நாம் பார்க்க வேண்டியது என்னவென்றால், தமிழக அரசு இனிவரும் காலங்களில் கடன் வாங்குவதை நிறுத்தவே முடியாது என்பதை மிக வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளதுதான். தேர்தல் சமயத்திற்கு முன்பாக, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் கடன் வாங...